ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட ஐடி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி... ராமாபுரத்தில் பதற்றம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட ஐடி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி... ராமாபுரத்தில் பதற்றம்

சென்னை: ஏசி ரூம்ல உட்கார்ந்து கம்யூட்டர் மட்டும் பார்ப்போம்னு நினைச்சீங்களா? நாங்க எல்லாம் ஊர்காரங்கதான், எங்க பாரம்பரியத்திற்கு ஏதாவது ஒரு ஆபத்துன்னா நாங்கதான் வருவோம் என்று எழுச்சியோடு பேசி வருகின்றனர் ஐடி நிறுவன ஊழியர்கள்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக இளைஞர்கள், மாணவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கான ஐடி நிறுவன ஊழியர்கள் பங்கேற்று பீட்டா அமைப்பிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனிடையே ராமாபுரம் டிஎல்எப் ஐடி பார்க் அருகில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் தடியடியால் ராமாபுரம் பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை