ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த சென்னை ஐடி ஊழியர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த சென்னை ஐடி ஊழியர்கள்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெருங்குடியில் 5000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாணவர்களின் போராட்டடத்துக்கு ஆதரவு தெரிவித்து மெரினா நோக்கி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் தொடங்கியுள்ள போராட்டம் ஒவ்வொரு வினாடியும் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

மெரினாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் 5000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர்கள் சென்னை மெரினா நோக்கி திரண்டு வருகின்றனர். ஐடி ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை பெருங்குடி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி. ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் பல லட்சம் மாணவர்கள் வீதிக்கு வந்ததால் தமிழகமே போராட்டக்களமானது.

மூலக்கதை