மம்முட்டிக்கு ஜோடியாக திருநங்கை

PARIS TAMIL  PARIS TAMIL
மம்முட்டிக்கு ஜோடியாக திருநங்கை

 மம்முட்டி மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் என்றாலும் ஏனோ தமிழ்ப்படங்கள் மட்டும் அவருக்கு வொர்க்அவுட்டாகவே இல்லை. ஆனாலும் அவ்வப்போது தமிழிப்படங்களில் முகம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் மம்முட்டி. 6 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படம் பேரன்பு. ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் இப்படத்தில் அஞ்சலி ஒரு கதாநாயகியாக நடிக்கிறார்.

 
'பேரன்பு' படத்தில் இன்னொரு கதாநாயகியாக அஞ்சலி அமீர் என்ற திருநங்கை நடித்துள்ளார். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறாராம் இயக்குனர் ராம். அதற்காகத்தான் அஞ்சலி அமீர் என்ற திருநங்கையை ராம் தேர்வு செய்தாராம்! அஞ்சலி அமீர் திருநங்கை என்றாலும் மாடலிங் துறையிலும் பிரபலமானவராக இயங்கி வருகிறார் என்று கூறப்படுகிறாது.
 
இவர் நடிக்கும் முதல் தமிழ் படமான 'பேரன்பு' படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் தவிர 'தரமணி' என்ற படத்தையும் ராம் இயக்கியுள்ளார். படம் முடிந்து பல மாதங்களாகியும் பிசினஸ் ஆகாததினால் பட வெளியீடு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.

மூலக்கதை