சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!

 சிறிலங்கா கணனி பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் செய்யவுள்ளது.

 
இந்த நடவடிக்கைக்கு அவசியமான உதவி மற்றும் ஆலாசனை வழங்குவதற்கு மைக்ரோசொப்ட் தலைவர் ஜேன் பிலிப் கர்டோஸ் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைக்ரோசொப்ட் தலைவருக்கு இடையில் சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்காலத்தில் காகித ஆவணங்கள் அற்ற அலுவலக சூழல் ஒன்று உருவாக்கப்படும் என்று மைக்ரோசொப்ட் தலைவர் ஜேன் பிலிப் கர்டோஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் அவதானம் செலுத்துவதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலக்கதை