மனசுக்கு பிடிச்ச அவரோட மீண்டும் ஜோடி சேரும் அமலா பால்

PARIS TAMIL  PARIS TAMIL
மனசுக்கு பிடிச்ச அவரோட மீண்டும் ஜோடி சேரும் அமலா பால்

 அமலா பால், தன் காதல் கணவர் இயக்குனர் விஜய்க்கு குட் பை சொன்ன அந்த நாளில் இருந்து, இது நாள் வரை தன் மகிழ்ச்சியை எப்படி எல்லாம் கொண்டாட முடியுமோ, அவ்வளவு கொண்டாடுகிறார். நண்பர்களுடன் ஊர் சுற்றல், பார்ட்டிகள் என்று மேடம் உலகம் உல்லாச உலகமாக மாறிவிட்டது.
அது மட்டும் இல்லாம, விஐபி2, வடசென்னை, சின்ட்ரெல்லா, திருட்டுப் பயலே 2 என்று தமிழில் மட்டும் 7 படங்களுக்கு மேல் கமிட் ஆகி உள்ளார்.
 
இது இல்லாமல், மலையாள படங்களும் அவரை தேடி வருகின்றன. நடிகை ரேவதி இயக்கும் மலையாளப்படத்தில் அம்மணி தான் ஹீரோயின்.
 
ஏற்கனவே அமலா பால் கல்யாணத்துக்கு பின் நடித்த அம்மா கணக்கில் நடிகை ரேவதியுடன் நடித்தார். இப்போது, மீண்டும் அவருக்கு பிடித்த ரேவதியுடன் மீண்டும் இணைந்துள்ளது அமலாவுக்கு மகிழ்ச்சியாம்.

மூலக்கதை