போராடும் தம்பி, தங்கைகள்தான் உண்மையான வீரர்கள்... ஒரு மாடு பிடி வீரரின் உணர்ச்சிப் பேச்சு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போராடும் தம்பி, தங்கைகள்தான் உண்மையான வீரர்கள்... ஒரு மாடு பிடி வீரரின் உணர்ச்சிப் பேச்சு!

சென்னை: ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற களத்தில் இறங்கிப் போராடும் தம்பி தங்கைகள்தான் உண்மையான வீரர்கள் என்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாடு பிடி வீரரான துரைப்பாண்டி கணேசன் உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக இது நாள் வரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் போராடி வந்தனர். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே களத்தில் குதித்து விட்டது.

அது மட்டுமா.. உலக அளவிலும் ஜல்லிக்கட்டை ஆதரித்து தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் போராடிக் கொண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தைத் தாண்டி போயிராத ஜல்லிக்கட்டை உலகளவில் கொண்டு போய் விட்டது மத்திய அரசின் பிடிவாதமும், பீட்டாவின் திமிர்த்தனமும்.

மக்கள் வெகுண்டெழுவார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் தங்களது கலாச்சாரத்தைக் காக்க திரண்டெழுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடு பிடி வீரரும், தற்போது சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவருமான துரைப்பாண்டி கணேசன், ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவியருக்கும் நன்றி கூறியுள்ளார். அவர்கள்தான் உண்மையான வீரர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அவரது பேச்சு அடங்கிய வீடியோ:

மூலக்கதை