ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மொட்டை.. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மொட்டை.. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தனியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்மபுரி, கன்னியாகுமரி, ஓமலூர் பாம்பன், விருதாசலம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு அமைப்பினரு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தனியாக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்ற தடையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தர்மபுரி, கன்னியாகுமரி, ஓமலூர், பாம்பன், விருதாசலம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மொட்டை போட்டு போராட்டடம் நடத்திய அவர்கள், பாம்பனில் படகில் சென்றும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

மூலக்கதை