ஆஸ்திரேலிய ஓபன் வீனஸ், குல்னெட்சோவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய ஓபன் வீனஸ், குல்னெட்சோவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 13வது முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய வீனஸ் வில்லியம்ஸ், இந்த ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவின் மிக அதிக வயதுடைய வீராங்கனையாக (36) உள்ளார். இன்று காலை நடந்த 2வது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ஸ்டீபெனியா வோக்லேவை எதிர்கொண்ட அவர், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டி 83 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வீனஸ் வில்லியம்ஸ் 3வது சுற்றில் சீனாவின் டுயான் யிங்யிங் அல்லது அமெரிக்காவின் வர்வரா லெப்சென்கோவை எதிர்கொள்ள உள்ளார்.



வீனஸ் வில்லியம்ஸ் 17வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட அவர் சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது.

2003ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறியதுதான் அவரது அதிகபட்ச சாதனை. அந்த போட்டியில் தனது சகோதரி செரீனா வில்லியம்சிடம் அவர் தோல்வி கண்டார்.


இதேபோல் இன்று காலை நடந்த மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியில், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குல்னெட்சோவா-ஆஸ்திரேலியாவின் ஜேமி போர்லிஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வெட்லானா குல்னெட்சோவா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.


.

மூலக்கதை