படப்பிடிப்பில் கோக், பெப்சிக்கு தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
படப்பிடிப்பில் கோக், பெப்சிக்கு தடை

விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா, சூது கவ்வும் மற்றும் அட்டகத்தி, தெகிடி, முண்டாசுபட்டி, இறுதிச்சுற்று, அதே கண்கள் போன்ற படங்களை தயாரித்ததுடன் மாயவன் படத்தை இயக்கி வருபவர் சி. வி. குமார். இவர் கூறும்போது, ‘சமீபகாலமாக விவசாயிகள்படும் துன்பங்களை கண்டு வருத்தம் அடைகிறேன்.

விவசாயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு குளிர்பானங்களை இனி நானும், என் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிக்கப்போவதில்லை.

விவசாயத்தின் மகத்துவம் காப்பது நம் கடமை’ என குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை