மம்மூட்டி ஜோடியாக திருநங்கை அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மம்மூட்டி ஜோடியாக திருநங்கை அஞ்சலி

திருநங்கைகளை படங்களில் நையாண்டி காட்சிகளுக்காக பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. தற்போது முக்கிய கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

சில படங்களில் திருநங்கைகளே முக்கிய வேடமேற்று நடிக்கின்றனர். இன்னும் சிலவற்றில் ஹீரோக்கள், வில்லன் நடிகர்கள் திருநங்கை வேடம் ஏற்று நடிக்கின்றனர்.

கற்றது தமிழ் இயக்குனர் ராம் அடுத்து பேரன்பு படத்தை இயக்குகிறார். இதில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார்.

ஜோடியாக திருநங்கையும், மாடல் அழகியுமான அஞ்சலி அமீர் நடிக்கிறார். சமீபத்தில் மம்மூட்டியை சந்தித்த அஞ்சலி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மம்மூட்டியுடன் நடிப்பதுபற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை