பாகுபலியை கட்டப்பா கொல்லல, மான்களை சல்மான் கொல்லவில்லை!!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகுபலியை கட்டப்பா கொல்லல, மான்களை சல்மான் கொல்லவில்லை!!!

ஜோத்பூர்: சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் இந்தி படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது. அப்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் கன்கனி கிராமத்தில் தனது துப்பாக்கியால் இரண்டு மான்களை சுட்டு வேட்டையாடினார்.

இது தொடர்பான நான்கு வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார். அவர் உரிமம் காலாவதியான துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்து மான் வேட்டையாடிய வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் ஜனவரி 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்கு ஆதாரம் இல்லாததால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பையில் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கிலும் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.

பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை, மான்களை சல்மான் கொல்லவில்லை என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை