குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்- ஆதார் அட்டையை ஒப்படைப்போம்- மாணவர்கள் எச்சரிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் ஆதார் அட்டையை ஒப்படைப்போம் மாணவர்கள் எச்சரிக்கை!

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தராவிட்டால் ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்; பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கைகள்.

அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் வரும் 26-ந் தேதி இந்திய மத்திய அரசின் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மத்திய அரசின் ஆதார் தட்டையை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை