கையை முடக்க புகார் எதிரொலி பாஜ பயப்பட வேண்டாம் - ராகுல் டுவிட்டரில் கிண்டல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கையை முடக்க புகார் எதிரொலி பாஜ பயப்பட வேண்டாம்  ராகுல் டுவிட்டரில் கிண்டல்

புதுடெல்லி - கை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் பாஜ புகார் கொடுத்துள்ளது. இதற்கு, ‘பாஜ பயப்பட வேண்டாம்’ என ராகுல்காந்தி டுவிட்டரில் கிண்டல் அடித்துள்ளார்.

டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரசின் சின்னமான ‘கை’யை பல்வேறு மத கடவுள்களுடன் இணைத்து ராகுல்காந்தி பேசினார். ராகுலின் இந்த பேச்சு தேர்தல் விதி முறை மீறல் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது என்றும் பாஜ குற்றம் சாட்டியது.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று ராகுல் மீது புகார் கொடுத்தனர்.

புகாரில், ராகுல் மதரீதியாக பிரசாரம் செய்ததால் காங்கிரசின் கை சின்னத்தை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கு ராகுல் தனது டுவிட்டரில், ‘‘டியர் பாஜ, பயப்பட வேண்டாம்’’ என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

.

மூலக்கதை