மெரினா இளைஞர்கள் போராட்டத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு

தினத்தந்தி  தினத்தந்தி
மெரினா இளைஞர்கள் போராட்டத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு

சென்னை

சென்னை மெரீனாவில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர்கள் ராகவாலாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர் களும் இளைஞர்களுடன் தரையில் உட்கார்ந்து கோரிக் கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டார்.இது போல் மற்ற நடிகர்-நடிகைகளும் போராட்டத் துக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கிய நடிகர், நடிகைகள், கலை உலகினர் நேரில் வந்து ஆதரவு  தெரி விப்பார்கள் என்று கூறப் படுகிறது.

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪#WeNeedJallikattupic.twitter.com/UWICqAfZmL

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 9, 2017

மூலக்கதை