பஞ்சாப் காங். முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங் சொத்து ஸ்ரீ.49 கோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப் காங். முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங் சொத்து ஸ்ரீ.49 கோடி

அமிர்தசரஸ் - பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான அமரீந்தர் சிங் தனக்கு ரூ. 49 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

முதல்வர் பாதலை எதிர்த்து காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங் நேரடியாக களம் இறங்கியுள்ளார். இதனால் அங்கு அகாலிதளம் கட்சிக்கும், காங்கிரசுக்கும் வாழ்வாசாவா போராட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாதல் போட்டியிடும் லம்பி தொகுதியில் அவரை எதிர்த்து அமரீந்தர் சிங் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, அவருக்கு துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, பாட்டியாலாவில் பரம்பரை சொத்தாக மோதிபாக் அரண்மனை, நகைகள், வைரங்கள் ஆகியவை உள்பட ரூ. 49 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவரது மனைவியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரணீத் கவுருக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 86. 33 கோடி சொத்துகள் உள்ளன.

பாட்டியாலாவில் அரண்மனை பரப்பு 43. 41 லட்சம் சதுர அடி. இதன் மதிப்பு மட்டுமே ரூ. 35 கோடி.
துபாயில் குடியிருப்பு மதிப்பு ரூ. 96 லட்சம்.   கரார் மற்றும் ஹரித்துவாரில் ரூ. 2. 06 கோடியில் விவசாய பண்ணை, ரூ. 12. 17 லட்சத்தில் பார்ச்சூனர் கார், ரூ. 4. 05 லட்சத்தில் இன்னோவா கார், அவருக்கு ரூ. 32. 86 லட்சம் மதிப்புடைய நகைகளும், மனைவிக்கு ரூ. 35. 70 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கையிருப்பாக ரூ. 90 ஆயிரம், வங்கியில் ரூ. 32. 85 லட்சம் டெபாசிட் உள்ளதாகவும், மனைவியின் பெயரில் ரூ. 1. 58 கோடி டெபாசிட் உள்ளதாகவும், பங்கு சந்தையில் ரூ. 47. 59 லட்சம் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றும்  தெரிவித்துள்ளார்.



.

மூலக்கதை