ஜல்லிக்கட்டு: பெருநெருப்பாய் போராடும் தமிழகம்- live

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டு: பெருநெருப்பாய் போராடும் தமிழகம் live

சென்னை: ஜல்லிக்கட்டு என்கிற தமிழரின் பண்பாட்டு உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் இடைவிடாத அமைதிவழி அறப்போரை நடத்தி வருகின்றனர்.

இந்தி எதிர்ப்புக்கு எதிராக, 1980களில் இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிரான கிளர்ச்சிகளைவிட மிக தீவிரமடைந்துள்ளது ஜல்லிக்கட்டுக்கான பேரெழுச்சிப் போராட்டம்.

-அலங்கநால்லூர் போராட்டத்தில் பெண் மயக்கம்

-சென்னை ஓஎம்ஆர் சாலையில் மாணவர்கள் மீது தடியடி

-மாணவர்கள். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

-சாலை மறியல் போராட்டத்தால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து முடக்கம்

-போலீசார் தடியடியால் மாணவர்களுக்கு படுகாயம்

-நாலாபுறமும் சிதறி ஓடியதால் ஓஎம்ஆர் சாலையே போர்க்க்களமானது

-அலங்காநல்லூர்- மதுரை சாலையில் போராட்டம்

-தேனி பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் போராட்டம்

-திருச்சி உழவர் சந்தை அருகே இளைஞர்கள் போராட்டம்

-பொன்னேரி திவேங்கடபுரத்தில் இளைஞர்கள் போராட்டம்

-ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலை. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

-பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

-மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்

-தமுக்கம் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் மதுரையில் போக்குவரத்து முடக்கம்

-பாம்பனில் தூக்கு பாலத்தின் மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்- கைது

-திருமங்கலம் கரடிக்கல்லில் மாணவர்கள் போராட்டம்

-காஞ்சிபுரத்தில் 2-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

-திண்டுக்கல் கல்லறைத் தோட்டம் அருகே 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

மூலக்கதை