தனிஷ்க், கோல்டு பிளஸ் இணைப்பு டைட்டன் நிறுவனம் முடிவு

தினமலர்  தினமலர்

புதுடில்லி: டைட்­டன் நிறு­வ­னம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்­டு­களை, ஒன்­றாக இணைக்க முடிவு செய்­துள்­ளது.டாடா குழு­மத்தை சேர்ந்த டைட்­டன் நிறு­வ­னம், கை கடி­கார சந்­தை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. டைட்­டன், ‘தனிஷ்க்’ என்ற பெய­ரில், தங்க நகை கடை­களை நடத்தி வரு­கிறது. முக்­கிய நக­ரங்­களில், கோல்டு பிளஸ் என்ற பெய­ரி­லும், தங்க நகை கடை வைத்­துள்­ளது. இது, 1995ல் துவங்­கப்­பட்­டது.இந்­நி­லை­யில், டைட்­டன் நிறு­வ­னம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்­டு­களை, ஒன்­றாக இணைக்க முடிவு செய்­துள்­ளது.இது­ கு­றித்து, டைட்­டன் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:இந்­தி­யர்­கள் விரும்­பும் வகை­யில், அழ­கிய வடி­வங்­களில், தனிஷ்க் தங்க ஆப­ர­ணங்­களை விற்­பனை செய்­கிறது. தற்­போது, தென் மாநி­லங்­களில் உள்ள பெரிய நக­ரங்­களில், 30 கோல்டு பிளஸ் ஸ்டோர்­கள் உள்ளன. வாடிக்­கை­யா­ளர்­கள் விருப்­பத்தை தொடர்ந்து தக்க வைக்க, டைட்­டன் முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகி­ய­வற்றை ஒன்­றாக இணைக்க முடிவு செய்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை