எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம்

தினமலர்  தினமலர்

மும்பை: செல்­லாத நோட்டு அறி­விப்பை அடுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிச., மாதம், 1.05 லட்­சம் கார்­டு­களை வினி­யோ­கம் செய்­துள்­ளது.இந்­தி­யா­வில், ‘கிரெ­டிட் கார்டு’ வினி­யோ­கிப்­ப­தில், எஸ்.பி.ஐ., கார்டு, இரண்­டா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. கிரெ­டிட் கார்டு சந்­தை­யில், இந்­நி­று­வ­னம், 2 கோடியே 73 லட்­சம் கார்­டு­களை கொண்­டுள்­ளது. மத்­திய அரசு, கடந்த நவ., மாதம், செல்­லாத நோட்டு அறி­விப்பை வெளி­யிட்டு, டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னையை மேற்­கொள்­ளு­மாறு, அனை­வ­ரை­யும் வலி­யு­றுத்தி வரு­கிறது.இதை­ய­டுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிசம்­பர் மாதத்­தில் 1.05 லட்­சம் கிரெ­டிட் கார்­டு­களை வினி­யோ­கம் செய்­துள்­ளது.இது­கு­றித்து, எஸ்.பி.ஐ., கார்டு அதி­காரி, விஜய் ஜசுஜா கூறி­ய­தா­வது: டிசம்­பர் மாதம் மட்­டுமே, 1 லட்­சத்து 5 ஆயி­ரம் புதிய கார்­டு­கள் வினி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இதில் 35 முதல் 40 சத­வீ­தம் வரை செயல்­பாட்­டுக்கு வரா­மல் போனா­லும் கூட, புதி­தாக, 65,000 கார்­டு­கள் டிசம்­பர் மாதத்­தில் சேர்ந்­துள்­ளன.கடந்த சில மாதங்­க­ளாக சரா­ச­ரி­யாக, ஒரு லட்­சம் கிரெ­டிட் கார்­டு­கள் வினி­யோ­கம் செய்­யப்­பட்டு வரு­கின்றன. இதுவே ஓராண்­டுக்கு முன், 65,000 என்ற அள­வில்­தான் இருந்­தது.செல்­லாத நோட்டு அறி­விப்­புக்கு பின், தங்க ஆப­ர­ணங்­கள், எரி­பொ­ருள் உள்­ளிட்ட பிரி­வு­களில் செல­வ­ழிப்­பது கணி­ச­மாக குறைந்­தி­ருந்­தா­லும், எஸ்.பி.ஐ., கார்­டு­களின் மூல­மாக செல­வ­ழிக்­கப்­பட்ட தொகை, 25 முதல் 30 சத­வீ­தம் வரை அதி­க­ரித்­தி­ருக்­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை