இலங்­கை­யில் உற்­பத்தி; இந்­தி­யா­வில் விற்­பனை கோக­கோலா நிறு­வ­னம் புதிய திட்­டம்

தினமலர்  தினமலர்

கொழும்பு : கோககோலா நிறுவனம், இலங்கையில் அதன் குளிர்பானங்களை உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக, கோககோலா நிறுவனத்தின், ஆசிய பசிபிக் பிராந்திய பிரிவின் தலைவர்கள், இலங்கை நிதியமைச்சர் ரவி கருணநாயகேவை சந்தித்து பேசியுள்ளனர்.இதையடுத்து, இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை, இந்தியாவில், கோககோலா நிறுவனத்தின் குளிர்பான வகைகளுக்கு தேவை அதிகம் உள்ளது.அதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், இலங்கையை தங்களின் குளிர்பான உற்பத்தி மையமாக அமைத்துக் கொள்ள விரும்புவதாக, கோககோலா நிறுவன உயரதிகாரிகள் கூறியுள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய குளிர்பான சந்தையின் மதிப்பு, 500 கோடி டாலராக உள்ளது. இச்சந்தையில், கோககோலா நிறுவனம், கோககோலா, ஸ்பிரைட், பேண்டா, தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறது.

மூலக்கதை