சுரங்கத்தை கண்காணிக்க ஆளில்லா விமானம்

தினமலர்  தினமலர்

மும்பை : ஜார்க்­கண்ட் மாநி­லம், மேற்கு சிங்­பும் மாவட்­டத்­தில் உள்ள, நொமுண்டி இரும்­புச் சுரங்­கத்­தில், டிரோன் எனப்­படும், ஆளில்லா விமா­னம் மூலம் கண்­கா­ணிக்­கும் நடை­முறை, சோதனை அடிப்­ப­டை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.நாட்­டி­லேயே, முதன்­மு­றை­யாக, சுரங்­கங்­களில், ஆளில்லா விமான கண்­கா­ணிப்பு முறை இங்கு தான் அமல்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.இது குறித்து, மத்­திய சுரங்க அமைச்­ச­கத்­தின் செய­லர் பல்­விந்­தர் குமார் கூறி­ய­தா­வது:டிரோன் மூலம், சுரங்­கங்­கள், குவா­ரி­களில் சட்ட விரோ­த­மாக நடை­பெ­றும், அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் கண்­டு­பி­டிக்க முடி­யும்.மனி­த­னால் செல்ல முடி­யாத இடத்­திற்­கும் கூட, ஆளில்லா விமா­னத்தை பயன்­ப­டுத்தி, பல தக­வல்­களை பெற முடி­யும்.இவ்­வாறு கூறி­னார்.டாடா ஸ்டீல் நிறு­வ­னம், நொமுண்டி சுரங்­கத்தை நிர்­வ­கித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை