இந்திய நிறுவனங்களின் வருவாய், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்

டாவோஸ்: இந்­திய நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள், இந்­தாண்டு, தங்­கள் நிறு­வன வரு­வா­யும், வேலை­வாய்ப்­பும் அதி­க­ரிக்­கும் என, தெரி­வித்து உள்­ள­னர்.பி.டபிள்யு.சி., நிறு­வ­னம், 2016 செப்., – டிச., வரை­யி­லான காலத்­தில், உல­க­ள­வில், 1,379 நிறு­வ­னங்­களின் வளர்ச்சி குறித்து, அவற்­றின் தலைமை செயல் அதி­கா­ரி­க­ளி­டம் ஆய்வு நடத்­தி­யது.இதில், 57 சத­வீ­தம் தனி­யார் நிறு­வ­னங்­கள்; 43 சத­வீ­தம் பொதுத் துறை நிறு­வ­னங்­கள் ஆகும். இவற்­றில், 36 சத­வீ­தம், ஆண்­டுக்கு, 100 கோடி டால­ருக்­கும் அதி­க­மாக வரு­வாய் ஈட்­டும் நிறு­வ­னங்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.ஆய்­வ­றிக்கை விப­ரம்:கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு, அதி­க­ள­வி­லான தலைமை செயல் அதி­கா­ரி­கள், தங்­கள் நிறு­வ­னங்­களின் வரு­வாய் வளர்ச்சி உய­ரும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர். அதில், இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு, 71 சத­வீ­த­மாக உள்­ளது. அடுத்து, பிரே­சில், 57, ஆஸ்­தி­ரே­லியா, 43, பிரிட்­டன், 41 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்ளன.ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில், 52 சத­வீ­தம் பேர், இந்­தாண்டு, தங்­கள் நிறு­வ­னங்­களில் பணி­யா­ளர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர்; இது, கடந்த ஆண்டு, 48 சத­வீ­த­மாக இருந்­தது.இந்த பட்­டி­ய­லில், இந்­தியா, 67 சத­வீ­தத்­து­டன் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், கனடா, 64, பிரிட்­டன், 63, சீனா, 60 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்ளன.இந்த ஆய்­வில், பெரும்­பான்­மை­யா­னோர், ஸ்தி­ர­மற்ற பொரு­ளா­தார சூழல், அதி­க­ள­வி­லான கட்­டுப்­பாடு, திற­மை­யான பணி­யா­ளர்­க­ளுக்கு பற்­றாக்­குறை ஆகி­யவை, நிறு­வன வளர்ச்­சிக்கு இடை­யூ­றாக இருக்­கும் என, கவலை தெரி­வித்­துள்­ள­னர்.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை