நியூசி. டெஸ்ட் தொடர் விலகினார் டி வில்லியர்ஸ்

தினகரன்  தினகரன்

ஜோகன்னஸ்பர்க்: நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக தென் ஆப்ரிக்க அணி அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நியூசிலாந்து செல்லும் தென் ஆப்ரிக்க அணி ஒரு டி20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் டுனெடின் மைதானத்தில் மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசி. டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து விலகுவதாக டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்தார். அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்றும், 2019ல் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். முழங்கை மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்த டி வில்லியர்ஸ் தற்போது முழுமையாகக் குணமடைந்து நல்ல உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை