நிலவில் கால் வைத்த கடைசி மனிதர் மரணம்

தினமலர்  தினமலர்
நிலவில் கால் வைத்த கடைசி மனிதர் மரணம்

ஹூஸ்டன்: நிலவில் கால்வைத்த கடைசி மனிதரான, அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர், ஜீன் செர்மான், 82, உடல்நிலை கோளாறால், நேற்று முன்தினம் காலமானார்.நிலவுக்கு கடைசியாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அப்பல்லோ - 17 விண்கலத்தை அனுப்பியது. 'சாலஞ்சர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலம், 1972, டிச., 11ல், நிலவை அடைந்தது. அந்த விண்கலத்தில், அமெரிக்காவின் ஜீன் செர்மான், ஹாரிசன்ஜாக் ஸ்குமிட் சென்றனர். டிச., 14ல் பூமிக்கு திரும்பியபோது, கடைசியாக நிலவில் கால் வைத்தது ஜீன் செர்மான். அதன் பின், நாசா அல்லது உலகின் எந்தவெரு நாட்டின் விண்வெளி அமைப்பும், இதுவரை, நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை. நிலவில் முதலில் கால் வைத்து புகழ்பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங்க் போல, கடைசியாக கால் வைத்த மனிதராக செர்மான் புகழ்பெற்றார். வயோதிகம் மற்றும் உடல்நலக் கோளாறுகளால், நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார்.

மூலக்கதை