மின்சாரத் தடை! - போக்குவரத்து ஸ்தம்பித்த RER C!!

PARIS TAMIL  PARIS TAMIL
மின்சாரத் தடை!  போக்குவரத்து ஸ்தம்பித்த RER C!!

இன்று காலை மின்சார கோளாறு காரணமாக RER C சேவைகள் ஸ்தம்பித்தது. இதனால் பயணிகள் அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
RER C வழியின் அனைத்து சேவைகளும் இன்று காலை தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பரிசில் இருந்து Val d'Oise வரை செல்லும் இந்த RER C சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை தடைப்பட்டுள்ளது. மின்சார வழங்கியிடம் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் தடைப்பட்டதால் மாற்று சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அது குறித்த தகவல்கள் SNCF இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். 
 
பின்னர் சேவைகள் நண்பகலுக்கு பின்னர் வழமைக்கு திரும்பியது. RER C சேவையில் ஒரு நாளைக்கு 540,000 பயணிகள் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை