உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்கள் கையில் உள்ளது!!!

PARIS TAMIL  PARIS TAMIL
உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்கள் கையில் உள்ளது!!!

உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில் இருப்பதாகவும் இதுவே உலகளவில் 50 சதவீதமாக உள்ளது என்று பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் (Oxfam) நிறுவனம் ஆய்வு நடத்தியது, இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், ஆக்ஸ்போம் நிறுவனம் "பொருளாதாரம் 99 சதவீதம்" என்ற தலைப்பில் ஒரு  புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், அதில் உலக அளவில் உள்ள சொத்துக்களில் 58 சதவீத தொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில் உள்ளதாகவும், அவர்களிடம் உள்ள செல்வத்தின் அளவானது நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்திற்கு ஒப்பானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் 6 பேர் அமெரிக்க வர்த்தகர்கள் தலா ஒருவர் ஸ்பெயின் மற்றும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 743 கோடி டாலர்.
2-வது இடத்தில் ஸ்பானிஷ் அமான்சியோ ஆர்டேகா (amancio ortega) நிறுவனத்தின் சொத்து மதிப்பு 67 பில்லியன் (ரூ.663 கோடி டாலர்).
3-வது இடத்தில் அமெரிக்காவின் வாரன் பப்பெட் 60.8 பில்லியன் (602 கோடி டாலர்).
4-வது இடத்தில் மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 50 பில்லியன் (494 கோடி டாலர்)
5-வது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் 45.2 பில்லியன் (448 கோடி டாலர்).
6-வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க் 44.6 பில்லியன் (441 கோடி டாலர்).
7-வது இடத்தில் ஒரகில் தலைமை அதிகாரி லேரி எல்லிசன் 43.6 பில்லியன் (412 கோடி டாலர்).
8-வது இடத்தில் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க் 40 பில்லியன் (396 கோடி டாலர்) உள்ளனர்.
இவ்வாறு உலகின் சொத்துக்கள் கோடீஸ்வரர்களின் கையில் இருப்பதால் உலக பொருளாதாரத்தில் சமநிலை இல்லாத சூழ்நிலை ஏற்படும் என உலக பொருளாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் 74.5 சதவீத பொருளாதார வளர்ச்சியினை, 1 சதவீதம் மட்டுமே உள்ள ரஷ்ய செல்வந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி ரஷ்ய பொருளதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரம் 42.1 சதவீதம் அமெரிக்க செல்வந்தர்களைச் சார்ந்து இருக்கிறது. உலக பொருளாதாரத்தின் 50.8 சதவீதம் உலக செல்வந்தர்களிடம் இருக்கிறது.

ஆக்ஸ்போம் அறிக்கையின்படி, இந்தியாவில் வசிக்கும் 84 பில்லியனர்கள் கையில் 248 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறதாம். இதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 19.3 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். சன் பாராமெடிக்கல்ஸ் அதிபர் திலிப் சங்வி 16.7 பில்லியன் சொத்து மதிப்பு வைத்துள்ளார். விப்ரோ நிறுவனர் ஆஷிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். ஷிவ் நாடார் (1,110 பில்லியன் டாலர்), சைரஸ் பூனாவாலா (850 பில்லியன் டாலர்), லஷ்மி மிட்டல் (840 பில்லியன் டாலர்), உதய் கோடக் (630 பில்லியன் டாலர்), குமார் மங்களம் பிர்லா (610 பில்லியன் டாலர்). இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 3.1 டிரில்லியன் ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் ஒன்று சேர்ந்து உலக பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அரசியல் செல்வாக்கும் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. உலகின் பொருளாதார வளர்ச்சியின் பயன் சமூகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சென்று சேர்கிறது, அதே நேரத்தில் ஏழைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமே காணப்படவில்லை.  செல்வந்தர்களை மென்மேலும் செல்வந்தர்கள் ஆகியிருக்கிறார்கள், ஏழ்மையை அதிகரித்திருக்கிறது.

இதே ஆக்ஸ்போம் நிறுவனம் கடந்த 2016 ஜனவரியிலும் தனது ஆய்வறிக்கையினை வெளியிட்டது. அப்போது. 2010 ஆண்டுடன் ஒப்பிட்டு, சர்வதேச அளவில் 62 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 44 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும், அதே காலகட்டத்தில் ஏழைகளின் சொத்துமதிப்பு 41 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் உள்ள மக்களின் சொத்துக்களின் பாதியளவு, 62 பேரிடம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- ஒரு சிலர் மட்டும் பயனடையும் பொருளாதாரத்தால் பயனில்லை என்றும் அனைத்து மக்களுக்கும் சென்றடையக்கூடிய மனித பொருளாதாரத்தை உருவாக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
- 2015-ஆம் ஆண்டிலிருந்தே பணக்காரர்களாக உள்ள ஒரு சதவீத மக்கள்தான் தொடர்ந்து பணம் ஈட்டியுள்ளனர். மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது.
- அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீஸ்வரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜிடிபி-யை விட அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
- உலகில் உள்ள ஏழை மக்களில் பாதிக்கும் குறைவானவர்களின் சொத்து மதிப்பானது கடந்த இருபது ஆண்டுகளில் உள்ளதை விட தற்போது குறைந்துள்ளது.
ஏழைகளின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவீதம் சரிந்துள்ளது.
- பணியிடங்களில் ஊதியம் வழங்கலில் பாரபட்சம், பெண்களுக்கு குறைவான ஊதியம் ஆகியன ஏற்றத் தாழ்வுக்கான முக்கியக் காரணமாகும். பெண்களை விட ஆண்களுக்கு 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- இந்தியாவில் பாலின ஊதிய விகித ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரே பணியை நிறைவேற்றும் பெண்களுக்கு ஆண்களைவிட 30 சதவீதம் குறைவாக ஊதியம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் 60 சதவீத பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். 15 சதவீதம்பேர்தான் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதனால் ஊதிய விகிதத்தில் பாலின இடைவெளி இந்தியாவில் அதிகமாக உள்ளது.
- இந்தியாவில் உள்ள 40 கோடி பெண்களில் 40 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த பணிகளை கிராமப்பகுதிகளில் மேற்கொள்கின்றனர்.
- இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிகள் அந்நிறுவனத்தில் பணி புரியும் சாதாரண ஊழியரைக் காட்டிலும் 416 மடங்கு கூடுதலாக ஊதியம் பெறுகிறார்கள்.
- இந்தியாவில் உள்ள பெரும்பாலான பருத்தி ஆலைகள் பெரும்பாலும் சிறுமிகளை பணியில் அமர்த்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பருத்தி ஆலைகளில் 58 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
- உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது லாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை