தொடர் எதிர்ப்புகளால் ஜகா - பீட்டாவுக்கு திரிஷா டாட்டா

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடர் எதிர்ப்புகளால் ஜகா  பீட்டாவுக்கு திரிஷா டாட்டா

ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக நடிகை திரிஷா மீது தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது படத்துடன் இரங்கல் தெரிவித்து போஸ்டர் வெளியிட்டதுடன் இணைய தள பக்கத்தில் திட்டித் தீர்த்தனர்.

காரைக்குடியில் திரிஷா பங்கேற்ற கர்ஜனை படப்பிடிப்பையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் திரிஷா.

ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்துவது தான் தமிழ் பண்பாடா என்று திரிஷா கேட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட சிலர் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் திரிஷா பெயரில் இணைய தளத்தில் மெசேஜ் வெளியானது.

இது பிரச்னையை பெரிதாக்கியது. ஆனால் தன்னை பிடிக்காத யாரோ இணைய தள பக்கத்தில் ஊடுருவி இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுவதாக விளக்கம் அளித்தார்.

பிறகு டுவிட்டர் பக்கத்திலிருந்தே வெளியேறினார். முன்னதாக அவரது டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.



இந்நிலையில் திரிஷாவின் அம்மா உமா, சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் ‘திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரிஷாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் உமா கூறும்போது, ‘திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல.

பீட்டா அமைப்பில் திரிஷா உறுப்பினராகவோ, விளம்பர தூதராகவோ இப்போது இல்லை.

அவர் விலகிவிட்டார்’ என்றார்.

.

மூலக்கதை