நடிக்க வரும் முன்பே ஹீரோயின்களை மிரட்டும் ஸ்ரீதேவி மகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிக்க வரும் முன்பே ஹீரோயின்களை மிரட்டும் ஸ்ரீதேவி மகள்

நடிகை ஸ்ரீதேவிக்கு இந்தி, தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் விலகி நிற்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.

பிறகு தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் பெண் மந்திரவாதியாக நடித்திருந்தார். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார்.

மகள்கள் ஜான்வி, குஷி இருவருக்கும் நடிக்க வாய்ப்பு வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இருவருக்கும் சினிமாவில் நுழைய ஸ்ரீதேவி பச்சை கொடி காட்டவில்லை.

அதற்கு முன்னதாக நடிப்புக்கு தேவையான பயிற்சிகளை முறைப்படி அவர்கள் பெறுவதற்கு அனுமதி தந்திருக்கிறார்.

மூத்த மகள் ஜான்வி விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் உள்ளிட்ட சிலரிடம் இது குறித்து ஸ்ரீதேவி பேசி வருகிறார்.

இதற்கிடையில் பட விழாக்கள், பேஷன் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மகள்களுடன் சென்று அவர்களை திரையுலகினருக்கு அறிமுகம் செய்து வருகிறார். ஹீரோயினுக்கான முழு தகுதியும் ஜான்விக்கு ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீதேவி முடிவு செய்துள்ளார்.

விதவிதமான காஸ்டியூம்கள் அணிந்து ஜான்வி தனது தோற்றத்தை அவ்வப்போது இணைய தள மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் மல்டி கலர் காஸ்டியூம் ஒன்றை அணிந்து அவர் அளித்திருந்த போஸ் இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.

அது மட்டுமல்ல அவ்வப்போது டூ பீசில் போஸ் தந்து படு கவர்ச்சியாகவும் நடிப்பேன் என இப்போதே சூசகமாக சொல்லி வருகிறார்.

நடிகையாக என்ட்ரி ஆவதற்கு முன்பே ஜான்வியின் இந்த அதிரடி போஸ்கள், மற்ற இளம் ஹீரோயின்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

.

மூலக்கதை