ஸ்ருதியை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ருதியை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குனர் ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் தான் இசை அமைத்த ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலை புதிய வடிவில் எழுதி அதன் மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். இந்த பாடல்களுக்கான வரிகளை அவரது ரசிகர்களே அனுப்பி இருந்தனர்.

அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வரிகளை கொண்டு இப்பாடலை அமைத்திருந்தார். இந்நிலையில் ஊர்வசி பாடலைப் போலவே மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் இடம்பெற்ற காட்டுச் சிரிக்கி பாடலையும் ரஹ்மான் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் இந்தி பதிப்பின் பாடலான ரான்ஜா ரான்ஜா மறுஉருவாக்கத்தை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடி உள்ளார்.   ஸ்ருதிஹாசன் ஏற்கனவே பல்வேறு பாடல்கள் பாடி இருந்தாலும் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் முதன்முறையாக பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை