சீனா - அமெரிக்கா நேரடி மோதல் அபாயம்: சீன பத்திரிகை தகவல்

தினமலர்  தினமலர்
சீனா  அமெரிக்கா நேரடி மோதல் அபாயம்: சீன பத்திரிகை தகவல்

பெய்ஜிங்: சீனா மற்றும் அமெரிக்கா இடையே, நேரடி மோதல் ஏற்படும் என சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிப்பு:

இது தொடர்பாக, அந்த பத்திரிகை வெளியிட்ட தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், டிரம்ப் நிர்வாகத்திற்கு உரிய பதிலடி, விரைவாக கொடுக்க சீனா தயாராக இருக்க வேண்டும். எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றம் வழக்கமாக இருக்கும் வகையில், இந்த மோதலில் சீனா வெற்றி பெற வேண்டும். நேட்டோ பயனற்றது என டிரம்ப் கூறி வருகிறார். இது பெய்ஜிங்கை அசைப்பது போல் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவுக்கு சாதகமான டிரம்பின் கொள்கைகள், ஐரோப்பாவை புறக்கணிப்பது போல் உள்ளது. இது உலக நாடுகளை உலுக்குவதுடன், சீனாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுபரீசலனை:

சில நாடுகளுடன் உள்ள உறவை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்ற சில நாடுகளுடன் உள்ள உறவை சீனா வளர்க்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவின் விளையாட்டை சமாளிக்க முடியும். கடந்த 40 ஆண்டுகளாக உள்ள ஒரே சீனா கொள்கையை டிரம்ப் மறுபரீசலனை செய்ய வேண்டும் என்கிறார். இந்த கொள்கையை ரத்து செய்ய விரும்புவதுடன், அனைத்தையும்மாற்ற வேண்டும் என்கிறார். ஒரே சீனா கொள்கையை பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை