ஏடிஎம்களில் இனிமேல் ரூ.10 ஆயிரம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏடிஎம்களில் இனிமேல் ரூ.10 ஆயிரம் எடுக்கலாம்  ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி - ஏடிஎம்களில் இனிமேல் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் எடுக்கலாம் என்று  ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய்  நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், உடனடியாக போதிய அளவு புதிய  ரூபாய் நோட்டுகள் விநியோகிக்க முடியாததால், வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணம்  எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கடைசியாக, ஏடிஎம்களில் ஒரு நாளில் ஒருவர் ரூ. 4500 மட்டுமே எடுக்க முடியும் என்றிருந்தது. அதே போல், வங்கிகளில் சேமிப்பு கணக்கு  வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.   நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம்  வரை எடுக்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.



ஆனாலும், வங்கிகளுக்கு போதிய கரன்சி வராததால், பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னமும் பூட்டியே கிடக்கின்றன.   இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஏடிஎம்களில் தினமும் ரூ. 4500 எடுக்கலாம் என்பது ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதே சமயம், வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ. 24  ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடரும்.

வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு ரூ. 50 ஆயிரம்  எடுக்கலாம் என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

.

மூலக்கதை