தீவிரவாதிகளின் தாயகம் என்பதா? மோடியை கண்டித்து பாக். பார்லியில் தீர்மானம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாதிகளின் தாயகம் என்பதா? மோடியை கண்டித்து பாக். பார்லியில் தீர்மானம்

இஸ்லாமாபாத் - இந்திய பிரதமர் மோடியை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவாவில் கடந்த ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.

தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்’ என பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டு எதிர்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது எதிர்கட்சி எம்பிக்கள் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் மீது அடிப்படை ஆதாரமற்ற முறையில் மோடி குற்றம் சாட்டி வருகிறார்.

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்புவதற்காக சர்வதேச அரங்கில் மோடி திசை திருப்புகிறார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடந்து கொள்வதைப் போலவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறது.


காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவு அளிக்கும். அண்டை நாடுகளுடன் மோடி தலைமையிலான இந்திய அரசு தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினர்.

இந்த தீர்மானம் விவாதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

.

மூலக்கதை