அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன் நடிகர் கருணாஸ் அறிக்கை

தினத்தந்தி  தினத்தந்தி
அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன் நடிகர் கருணாஸ் அறிக்கை


சென்னை,

முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் தலை வரும் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன. நான் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறேன். எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அவரது ஆத்மா இன்னும் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறேன். என்னுடைய ஒரே தகுதி விசுவாசம்தான். எனவே கடைசிவரை அ.தி.மு.க. கூட்டணியில் தொடருவேன்.

ரஜினிகாந்தை பற்றி நான் பேசியதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. சமீபத்தில் எந்த ஒரு விழாவிலும் நான் அப்படி பேசவில்லை அவரை அரசியலுக்கு அழைக்கவும் இல்லை. கடைசி வரை எனது அமைப்பு அ.தி.மு.க. கூட்டணியில் தான் தொடரும். இது உறுதி.  இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார். 

மூலக்கதை