குழந்தை கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துள்ள ட்ரம்ப்? அதிர்ச்சி தகவல்!

PARIS TAMIL  PARIS TAMIL
குழந்தை கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துள்ள ட்ரம்ப்? அதிர்ச்சி தகவல்!

 அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்டுட் ட்ரம்ப்பிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே உள்ள ரகசியங்களை அம்பலப்படுத்துபோவதாக பிரபல ஹேக்கர் குழு மிரட்டல் விடுத்துள்ளது.

 
ஹேக்கர்கள் குழு இயக்கி வரும் Anonymous என்ற டுவிட்டர் பக்கத்திலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
 
குறித்த பதிவில், ரஷ்யா குண்டர்கள் குழு தலைவர், குழந்தை கடத்தல்காரர்கள் மற்றும் பண மோசடி செய்பவர்களுடன் டிரம்ப் நிதி மற்றும் தனிப்பட்ட உறவுகளை கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
 
எனினும், குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் அந்த குழு வெளியிடவில்லை. எப்படி வெளியிட போகிறார்கள் என்ற தகவலையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
 
Anonymous, ஏற்கனவே ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர், அது போலி என நிருபிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
 
ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற நாள் முதல் அவருக்கும் ரஷ்யாவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும், ட்ரம்ப் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக குற்றம்சாட்டுகள் எழுந்து பரபரப்பை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை