அதிக நண்பர்கள் இருந்தால் பிரச்சினை என்கிறார் கோலி!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிக நண்பர்கள் இருந்தால் பிரச்சினை என்கிறார் கோலி!

 ஒருவன் அதிகமான நண்பர்களை வைத்திருந்தால், அது உங்கள் இலக்கை திசைத்திருக்கவும் செய்யலாம் என கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

 
பிரிடிஷ் தொலைக்காட்சிக்காக நாசிர் ஹுசைனுக்கு பேட்டி அளித்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது:
 
எந்த ஒரு நபரும் ஒரு இலக்கையோ அல்லது செயலையோ முழு கவனத்துடன், கவனம் சிதராமல் செய்தால் தான் வெற்றி பெற முடியும். அதை பல சாதனையாளர்கள் உணர்த்தியுள்ளனர்.
 
நண்பர் எப்போது ஒருவருக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு அதிக நண்பர் அவர்களுடனான நட்பு பாராட்டுவதிலேயே அதிக நேரம் செலவாகும். அதோடு அவர்களின் பேச்சால் சில நேரங்களில் கவனம் சிதறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நான் எப்போதும் அதிக நண்பர்களை வைத்துக்கொள்வதில்லை.
 
நான் 2014ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது ரன் எடுக்க திணறினேன். அப்போது என் மனதுக்கு மிகவும் அழுத்தம் ஏற்பட்டது.
அதன் பின் என் பேட்டிங் ஸ்டைலை மாற்ற பல மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டேன். பலரும் என் பேட்டிங் மாறுவதற்கு உதவியாகவும் இருந்தனர்.
 
வேகப்பந்து அல்லது சுழற்பந்து எதிர்கொள்ளும் போது என் கால்கள் எப்படி வைத்து பேட்டிங் செய்தால் சரியாக எதிர்கொள்ள முடியும் என சச்சின் எனக்கு ஆலோசனையும் வழங்கினார். அதன் பின் என் பேட்டிங்கில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது என் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை