கேட்டரிங் கல்லூரியில் இடஒதுக்கீடு...‛நோ!' புதுச்சேரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
கேட்டரிங் கல்லூரியில் இடஒதுக்கீடு...‛நோ! புதுச்சேரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி


படிப்பு முடித்த உடனே, வேலைவாய்ப்பினை அள்ளி தரும் பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை விருந்தோம்பல் படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த முருங்கம்பாக்கத்தில், 'புதுச்சேரி ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில் நுட்ப கல்லுாரி' 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இக்கல்லுாரியில் பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை, விருந்தோம்பல் மூன்று ஆண்டு கால பட்ட படிப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்பில் 60 இடங்கள் உள்ளன.
இதுமட்டுமின்றி ஹவுஸ் கீப் பிங், உணவு உற்பத்தி, உணவு மற்றும் பானம் தயாரிப்பு குறித்து ஒன்றரை ஆண்டு கால பட்டய வகுப்பும், உணவு தயாரித்தல், உணவு பரிமாறுதல் தொடர்பான ஆறு மாத குறுகிய கால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
படிப்பு முடித்த உடனே வேலை வாய்ப்பினை அள்ளித் தரும் பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை விருந்தோம்பல் படிப்பில் சேர மாணவர்கள் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் தற்போது இணையதளத்தில், அகில இந்திய அள வில் வரவேற்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 22 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் இதில் சேரலாம்.
முருங்கப்பாக்கம் மகாலட்சுமி நகர், சுடலை வீதியில் உள்ள புதுச்சேரி ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்ப கல்லுாரியில் நேரிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பொது, ஓ.பி.சி., பிரிவினர் ரூ. 900, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.450 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
www.nchm.nic.in என்ற இணையதளத்தில் ஆன்--லைனில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. பொது, ஓ.பி.சி., பிரிவினர் 800 ரூபாய், எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினர் 400 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 14 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு, ஏப்ரல் 29ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு 'நோ'டில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம், தேசிய ஓட்டல் மேலாண்மை கேட்டரிங் தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரத்தின் கீழ் இந்த பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை விருந்தோம்பல் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
முருங்கப்பாக்கத்தில், புதுச்சேரி அரசு நடத்தும், புதுச்சேரி ஓட்டல் மேலாண்மை, கேட்ட ரிங் தொழில்நுட்ப கல்லுாரியும் இதன் கீழ் உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள இக்கல்லுாரிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெறப்பட்டு, இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்திலேயே இக்கல்லுாரி இருந்தாலும் புதுச்சேரி மாணவர்களுக்குக்கென எந்த இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. இது வினோதமாக உள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகம் மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், உள்ளூர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 15க்கும் மேற்பட்ட படிப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வருகிறது.
அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள 200 எம்.பி.பி.எஸ்., இடங்களில் புதுச்சேரிக்கு 40; காரைக்காலுக்கு 14 என மொத்தம் 54 எம்.பி.பி.எஸ்., இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது.காரைக்காலில் என்.ஐ.டி., கொண்டு வரப்பட்டாலும் அதிலும் 50 சதவீதம் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால் புதுச்சேரி அரசினால் ஆரம்பிக்கப்பட்ட புதுச்சேரி ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்ப கல்லுாரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடு அளிக்காமல், அகில இந்திய அளவில் சேர்க்கை நடத்தப்படுவது விந்தையாக உள்ளது.புதுச்சேரி மாநில மக்களின் வரிப்பணத்தில், மத்திய அரசு பங்களிப்புடன் தான் கல்லுாரி இயங்குகிறது.
மாநிலத்தின் இடம், தண் ணீர், மின்சாரம் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் வெளி மாநில மாணவர்களுக்கு சீட்டுகளை தாரை வார்ப்பது நியாயம் இல்லை.
எனவே, தேசிய ஓட்டல் மேலாண்மை கேட்டரிங் தொழில்நுட்ப கவுன்சிலை, மாநில அரசு அணுகி பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை, விருந்தோம்பல் படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற வேண்டும்.
இல்லையெனில், தேசிய ஓட்டல் மேலாண்மை கேட்ட ரிங் தொழில்நுட்ப கவுன்சிலில் இருந்து விலகி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று, முழு இடங்களையும் மாநில அரசே நிரப்பி, உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

மூலக்கதை