நுகர்வோர் மின்­னணு சாத­னங்­க­ளுக்கு சுங்க வரியை உயர்த்த கோரிக்கை

தினமலர்  தினமலர்
நுகர்வோர் மின்­னணு சாத­னங்­க­ளுக்கு சுங்க வரியை உயர்த்த கோரிக்கை

புது­டில்லி : நுகர்வோர் மின்­னணு சாத­னங்கள் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பின் தலைவர் மணிஷ் சர்மா கூறி­ய­தா­வது: வீடு­களில் பயன்­ப­டுத்தும் நுகர்வோர் மின்­னணு சாத­னங்கள் இறக்­கு­ம­திக்கு தற்­போது, 10 சத­வீதம் சுங்க வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதை, மத்­திய பட்­ஜெட்டில், 20 சத­வீ­த­மாக உயர்த்த வேண்டும். இதனால், இவ்­வகை சாத­னங்­களின் இறக்­கு­மதி குறைந்து, உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பயன்­பெறும். இது, மத்­திய அரசின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்­திற்கும் ஊக்கம் அளிக்கும்.
ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி, வரும் ஏப்., முதல் அம­லுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதில், வீட்டு பயன்­பாட்­டிற்­கான, நுகர்வோர் மின்­னணு சாத­னங்­க­ளுக்கு, 18 சத­வீ­தத்­திற்குள் வரி விதிக்­கு­மாறு, நிதி­ய­மைச்­ச­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளோம். பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், கடந்த ஆண்டு, நவ., – டிச., மாதங்­களில், நுகர்வோர் மின்­னணு சாத­னங்கள் விற்­பனை குறைந்­தி­ருந்­தது. தற்­போது, இயல்பு நிலை திரும்பி வரு­கி­றது. வரும், 2021 வரை, இத்­துறை, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 9.5 சத­வீத வளர்ச்சி காணும். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்ளார்.

மூலக்கதை