இந்­துஸ்தான் கோக­கோலா நிறு­வனம் 2 புதிய ஆலை­களை அமைக்­கி­றது

தினமலர்  தினமலர்
இந்­துஸ்தான் கோக­கோலா நிறு­வனம் 2 புதிய ஆலை­களை அமைக்­கி­றது

மும்பை : இந்­துஸ்தான் கோக­கோலா நிறு­வனம், 1,000 கோடி ரூபாய் முத­லீட்டில், இரு புதிய தொழிற்­சா­லை­களை அமைக்க உள்­ளது.
இந்­தி­யாவில், கோக­கோ­லாவின் துணை நிறு­வ­ன­மான, இந்­துஸ்தான் கோக­கோலா பிவ­ரேஜஸ், பாட்டில் நிரப்பும் தொழிலில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்­திற்கு, 26 இடங்­களில், பாட்டில் நிரப்பும் ஆலைகள் உள்­ளன. கோக­கோலா நிறு­வ­னத்தின், 65 சத­வீத பாட்­டில்கள் தேவை, அந்த ஆலை­களின் மூலம் பூர்த்தி செய்­யப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், இந்­துஸ்தான் கோக­கோலா, குஜராத் மாநிலம், ஆம­தாபாத்; ஆந்­திர மாநிலம், நெல்லுார் ஆகிய இடங்­களில், 1,000 கோடி ரூபாய் முத­லீட்டில், தொழிற்­சா­லை­களை அமைக்க உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி கிருஷ்­ண­குமார் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், ம.பி., மாநிலம், ஹாசாங்பாத் நகரில், ஏற்­க­னவே, 750 கோடி ரூபாய் முத­லீட்டில், பாட்டில் நிரப்பும் ஆலை ஒன்றை அமைக்கும் பணியில் இருக்­கி­றது. இது, 2018ல் செயல்­பாட்­டுக்கு வரும். தற்­போது, ஆம­தாபாத், நெல்­லுா­ரிலும் ஆலை­களை அமைக்க உள்­ளது. இவற்றின் மூலம், கோக­கோலா நிறு­வ­னத்தின் அனைத்து குளிர்­பா­னங்­க­ளுக்கும் தேவை­யான பாட்­டில்கள் நிரப்பும் பணி எளி­தாகும். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை