மோட்டார் வாக­னங்கள் ஏற்­று­மதி கடந்த ஆண்டில் 5 சத­வீதம் சரிவு

தினமலர்  தினமலர்
மோட்டார் வாக­னங்கள் ஏற்­று­மதி கடந்த ஆண்டில் 5 சத­வீதம் சரிவு

புது­டில்லி : இந்­தி­யாவின் வாக­னங்கள் ஏற்­று­மதி, கடந்த ஆண்டில், 5 சத­வீதம் குறைந்­துள்­ளது.
அமெ­ரிக்கா, ஜப்பான் உள்­ளிட்ட நாடு­களைச் சேர்ந்த, முன்­னணி கார், இரு­சக்­கர வாகன உற்­பத்தி நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில், தொழிற்­சா­லைகள் அமைத்­துள்­ளன. இங்கு உற்­பத்தி செய்­யப்­படும் வாக­னங்­களை, அந்­நி­று­வ­னங்கள், பல நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கின்­றன. அதன்­படி, 2016ல், மொத்த வாக­னங்கள் ஏற்­று­மதி, 34.34 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இது, 2015ல், 36.14 லட்சம் வாக­னங்­க­ளாக இருந்­தது. இதே காலத்தில், மூன்று சக்­கர வாக­னங்கள் ஏற்­று­மதி, 32.04 சத­வீதம் குறைந்து, 4.24 லட்­சத்தில் இருந்து, 2.88 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இரு­சக்­கர வாக­னங்கள் ஏற்­று­மதி, 24.60 லட்­சத்தில் இருந்து, 22.94 லட்­ச­மாக சரி­வ­டைந்து உள்­ளது. மோட்டார் சைக்கிள் ஏற்­று­மதி, 10.96 சத­வீதம் சரி­வ­டைந்து, 22.25 லட்­சத்தில் இருந்து, 19.81 லட்­ச­மாக குறைந்­து உள்­ளது.
அதே சமயம், ஸ்கூட்டர் ஏற்­று­மதி, 33.95 சத­வீதம் உயர்ந்து, 2.19 லட்­சத்தில் இருந்து, 2.94 லட்­சமாக அதி­க­ரித்­துள்­ளது. கார்கள் ஏற்­று­மதி, 52.62 சத­வீதம் அதி­க­ரித்து, 1.02 லட்­சத்தில் இருந்து, 1.56 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.
இது குறித்து, மோட்டார் வாகன உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்­பினர் கூறி­ய­தா­வது: இந்­திய மோட்டார் வாக­னங்­க­ளுக்கு, தென் அமெ­ரிக்கா மற்றும் ஆப்­ரிக்க நாடுகள் முக்­கிய சந்­தை­க­ளாக திகழ்­கின்­றன. அந்­நா­டு­களின் பொரு­ளா­தாரம், கடந்த ஆண்டில் மந்­த­மாக இருந்­தது. இதனால், இந்­தி­யாவில் இருந்து, அந்­நா­டு­க­ளுக்­கான இரு­சக்­கர மற்றும் மூன்று சக்­கர வாக­னங்கள் ஏற்­று­மதி குறைந்­தது. இதன் விளை­வாக, கடந்த ஆண்டில், மொத்த வாகன ஏற்­று­மதி, 5 சதவீதம் பாதிக்­கப்­பட்­டது. இவ்­வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை