மொத்த விற்­பனை பண­வீக்கம் உயர்வு; உணவு பொருட்கள் விலை சரிவு

தினமலர்  தினமலர்
மொத்த விற்­பனை பண­வீக்கம் உயர்வு; உணவு பொருட்கள் விலை சரிவு

புது­டில்லி : கடந்த, 2016ல், செப்., – நவ., வரை, மூன்று மாதங்­க­ளாக சரி­வ­டைந்து வந்த, மொத்த விற்­பனை விலை அடிப்­ப­டை­யி­லான பண­வீக்கம், டிசம்­பரில், 3.39 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
உணவுப் பொருட்கள் விலை குறைந்­தி­ருந்த போதிலும், தயா­ரிப்பு பொருட்­களின் விலை உயர்ந்­ததால், மொத்த விற்­பனை அடிப்­ப­டை­யி­லான பண­வீக்கம், டிசம்­பரில் அதி­க­ரித்­துள்­ளது; இது, நவம்­பரில், 3.15 சத­வீ­த­மாக இருந்­தது. மதிப்­பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் பண­வீக்கம், மைனஸ் 0.70 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது; இது, நவம்­பரில், 1.54 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது.
இதே காலத்தில், தயா­ரிப்பு பொருட்கள் பண­வீக்கம், 3.20 சத­வீ­தத்தில் இருந்து, 3.20 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. எரி­பொருள், மின்­சாரம் ஆகி­ய­வற்றின் பண­வீக்கம், 7.07 சத­வீ­தத்தில் இருந்து, 8.65 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஆண்டு, அக்­டோ­ப­ருக்­கான மொத்த விற்­பனை விலை அடிப்­ப­டை­யி­லான பண­வீக்கம், 3.39 சத­வீ­தத்தில் இருந்து, 3.79 சத­வீ­த­மாக மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை