மோகன்லாலுக்கு ஜோடியாக மீண்டும் ஆஷா சரத்..!

தினமலர்  தினமலர்
மோகன்லாலுக்கு ஜோடியாக மீண்டும் ஆஷா சரத்..!

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் டைரக்சனில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். இப்போது ஆஷா சரத்தும் மோகன்லாலும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.. சரி.. அதில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா தானே நடித்திருந்தார் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்குப்பின் இருவரும் ஜோடியாக நடித்த 'கர்மயோதா' படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தான் அர்த்தம். ஆம், மேஜர் ரவி டைரக்சனில் வெளியான அந்தப்படம் சரியாக போகாததால் இந்த ஜோடியும் வரவேற்பு பெறாமல் போனது..

மூலக்கதை