பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் இன்னொரு அஞ்சலி..!

தினமலர்  தினமலர்
பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் இன்னொரு அஞ்சலி..!

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தமிழில் அடியெடுத்து வைக்கும் விதமாக இயக்குனர் ராம் டைரக்சனில் 'பேரன்பு' என்கிற படத்தில் நடித்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. கொடைக்கானலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த அஞ்சலி தவிர இன்னொரு அஞ்சலியும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். முழுப்பெயர் அஞ்சலி அமீர்.. இவர் ஒரு திருநங்கை ஆவார்.. பொதுவாகவே திருநங்கைகளை ஏளனமாகவே பார்க்கும் இந்த ஊரில் சீனுராமசாமி அதை மாற்றும் விதமாக தான் இயக்கிய 'தர்மதுரை' படத்தில் திருநங்கை ஒருவரை நடிக்கவைத்து பாராட்டுக்களை பெற்றார்.

மூலக்கதை