பிரேமம் பாய்ஸை வைத்து படம் தயாரிக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்..!

தினமலர்  தினமலர்
பிரேமம் பாய்ஸை வைத்து படம் தயாரிக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்..!

'பிரேமம்' படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன் தான் இயக்கும் அடுத்த படத்தை குறித்து இன்னும் வாய் திறக்காதது ஆச்சர்யமாகத்தான் உள்ளது.. மோகன்லாலை வைத்து இயக்கப்போகிறார், மம்முட்டியையும் சிம்புவையும் வைத்து தமிழில் ஒரு படம் இயக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் அடிபட்டுக்கொண்டு இருக்க, அவரோ அடுத்ததாக இன்னொருவர் டைரக்சனில் தான் ஒரு படம் தயாரிக்கப்போவதாக அறிவித்து புதிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப்படத்தை இயக்குவது அல்போன்ஸ் புத்ரனின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான மோஷின் காசிம் என்பவர்தான்.. படத்தில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர்கள் அல்போன்ஸ் புத்ரனின் 'பிரேமம்' படத்தால் லைம் லைட்டுக்கு வந்த ஷிஜு வில்சன், கிருஷ்ணசங்கர், ஷராபுதீன் மற்றும் சபரீஷ் வர்மா ஆகியோர் தான். இதில் ஷிஜு வில்சன், ஷராபுதீன் இருவரும் இணைந்து நடித்த 'ஹேப்பி வெட்டிங்ஸ்' படம் நூறு நாட்கள் ஓடியதால் ரசிகர்களிடம் அவர்கள் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார்கள்.. 'பிரேமம்' படத்தில் அல்போன்ஸ் புத்ரன் அறிமுகப்படுத்திய, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மூன்று கதாநாயகிகளும் இன்று ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்கள். அந்தவகையில் இந்தப்படத்திலும் புதுமுக கதாநாயகி தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

மூலக்கதை