துல்கருக்கு 19.. மோகன்லாலுக்கு 20..!

தினமலர்  தினமலர்
துல்கருக்கு 19.. மோகன்லாலுக்கு 20..!

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீசாக மலையாளத்தில் வெளியாக வேண்டிய படங்கள் எல்லாம் தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய ஸ்ட்ரைக்கினால் பாதிக்கப்பட்டு, பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும், படத்தை எப்போது வெளியிடலாம் என காத்துக்கொண்டு இருந்தன. தற்போது ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே ரிலீஸ் தள்ளிப்போன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள்...

அந்தவகையில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமொண்டே சுவிசேஷங்கள்' படம் வரும் ஜன-19ஆம் தேதியும், மோகன்லால் நடித்துள்ள 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஜன-20ஆம் தேதியும் ரிலீஸாக இருக்கின்றன. துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'வெள்ளிமூங்கா' ஹிட் பட இயக்குனரான ஜிபு ஜேக்கப் டைரக்சனில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தில் கதாநாயகியாக மீனா நடித்துள்ளார்.

மூலக்கதை