மோகன்லாலின் 'கனுபப' பட பாடல்களை வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆர்

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் கனுபப பட பாடல்களை வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மனமந்தா, ஜனதா கேரேஜ் போன்ற தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் அவரது மலையாளப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவர துவங்கியுள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படம் தெலுங்கில் மன்யம் புலி எனும் தலைப்பில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து மோகன்லாலின் சமீபத்திய வெற்றிப்படமான ஒப்பம் படத்தின் தெலுங்கு டப்பிங் கனுபப எனும் பெயரில் உருவாகி வருகின்றது. பிப்ரவரி 3ல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, ஜனவரி 25ல் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனகா கேரேஜ் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றிய ஜூனியர் என்.டி.ஆர் மோகன்லாலின் அழைப்பை ஏற்று கனுபப பாடல்களை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

மூலக்கதை