அரசு வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த கோரிய வழக்கு; மாநில அரசு...

தினத்தந்தி  தினத்தந்தி
அரசு வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த கோரிய வழக்கு; மாநில அரசு...

புதுடெல்லி,
பொது போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல மனு தொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது.
தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர், நீதிபதி டி ஒய் சந்திர்சுட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே அறிக்கை சமர்பிக்குமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டும் ஆந்திரபிரதேசம், அஸ்ஸாம், நாகலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா, பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. வழக்கின் அடுத்த விசாரணையின் போது இந்த மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களின் போக்குவரத்து செயலர்களும் தகுந்த ஆவணங்களுடன் வழக்கின் மறு விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
சுரச்ஷா பவுண்டேசன் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், அரசு போக்குவரத்து வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் மேற்கண்ட கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை