வறட்சி நிவாரண நிதியாக ரூ39, 565 கோடி வழங்க மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வறட்சி நிவாரண நிதியாக ரூ39, 565 கோடி வழங்க மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை!!

டெல்லி: தமிழக அரசுக்கு வறட்சி நிவாரண நிதியாக 39, 565 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்மாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இது தொடர்பான மனுவை பிரதமர் அலுவலகத்தில் இன்று அளித்தார்.

தமிழக அரசின் மனுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை சமாளிக்க நிவாரண நிதியாக 39,565 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்தும் மத்திய அரசின் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை