57 பேரிடம் 70% சொத்து: இது தான் இந்தியா

தினமலர்  தினமலர்
57 பேரிடம் 70% சொத்து: இது தான் இந்தியா

தாவோஸ் : இந்தியாவில் உள்ள 57 பணக்காரர்களிடம் மட்டும், நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 70 சதவீதம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செல்வந்தர்களிடம் குவியும் பணம் :


உலக பொருளாதார கூட்டமைப்பின் கீழ் இயங்கும் ஆக்ஸ்பம் (Oxfam) என்ற அமைப்பு வெளியிட்டுட்டுள்ள ஆய்வில், இந்தியாவில் ஒரு சதவீதம் செல்வந்தர்களிடம் நாட்டில் உள்ள மொத்தம் செல்வத்தில் 58 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முகேஷ் அம்பானி, திலிப் சங்கவி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 செல்வந்தர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள மொத்த சொத்த மதிப்பு 248 பில்லியன் டாலர். மேலும் அடுத்த 20 ஆண்டுகளில், 500 பேரிடம் 2.1 ட்ரில்லயன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும். இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.

ஏழைகள் இன்னும் ஏழையாகும் நிலை :


இதனால் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஏழைகள், மேலும் ஏழைகளாக மாறுவார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, இந்தோனேசியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள 10 சதவீதம் பணக்காரர்களின் வருமானம் 15 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் 10 சதவீத ஏழைகளின் வருமானம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

பெண்களுக்கு குறைந்த சம்பளம் :


இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான சம்பள இடைவெளி விகிதம் 30 சதவீதம் வரை அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 60 சதவீதம் பெண்கள், சம வேலை செய்யும் ஆண்களை விட குறைவான சம்பளம் பெறுவதாகவும், 15 சதவீதம் பெண்கள் மட்டுமே அதிக சம்பளம் பெறுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை