பீட்டா அமைப்பில் திரிஷா இல்லை தயார் உமா பேட்டி

தினத்தந்தி  தினத்தந்தி
பீட்டா அமைப்பில் திரிஷா இல்லை தயார் உமா பேட்டி

சென்னை,

பீட்டா அமைப்பில் உள்ள நடிகை திரிஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அவருடைய டுவிட்டர் பக்கமும் சிலரால் முடக்கப்பட்டது. இதையடுத்து ‘ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை’ என்று திரிஷாவிளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் திரிஷாவின் தாயார் உமா இன்று சென்னை போலீஸ் கமி ஷனர் அலுவலகம் சென்று மனு கொடுத்தார். அதில், தனது மகள் திரிஷாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும். டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரிஷாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்து தவறான தகவல்களை பதிவு செய்து உள்ளனர்.திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல. ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷா எப்போதும் கருத்து தெரிவித்தது இல்லை.பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை.இவ்வாறு அவர் கூறினார்

மூலக்கதை