‘ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன்…’ சரத்குமார் சவால்

FILMI STREET  FILMI STREET
‘ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன்…’ சரத்குமார் சவால்

தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக  ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினி பேசியதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியதாவது…

“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர். மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.

கருத்துக்கள் சொல்லும்போது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை கருத்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது.

எந்த வகையான அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூற அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

தேவைப்படும்போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கக் கூடாது.

அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆளாக நான் நிற்பேன்.” என்றார்.

சரத்குமாரின் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து, அவரது கொடும்பாவியை எதிர்த்து வருகின்றனர்.

Sarath kumar speech about Rajinikanth and politics

மூலக்கதை