மனைவியின் அடிக்கு பயந்து வீடு போக மறுத்த நாகர்ஜுனா

PARIS TAMIL  PARIS TAMIL
மனைவியின் அடிக்கு பயந்து வீடு போக மறுத்த நாகர்ஜுனா

 உல்லாசத்தில் உச்சம் பெற்றவர் நாகர்ஜுனா. அதனால் அவர் விரைவிலேயே எமலோகம் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு போன பிறகும் இவரது சரச விளையாட்டு நின்றபாடில்லை. எமதர்மராஜா பலவகையிலும் துன்புறுத்த சொல்லி எமலோக பெண்களை இவரிடம் அனுப்பி வைத்தார். நாகர்ஜுனாவோ அந்த பெண்களை மயக்கி ஜாலியாக இருந்தார். இது எமதர்மராஜனுக்கு தொல்லையாகிவிட்டது. 

 
இந்த நிலையில் பூலோகத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த மகனும், மருமகளும் விவகாரத்து செய்துகொள்ளப் போவதாக தாயார் ரம்யா கிருஷ்ணனிடம் கூறுகிறார்கள். இதனால் மனம் வெதும்பிய அவர் தனி அறையில் போய் தனது கணவர் நாகர்ஜுனாவை சத்தம் போட்டு கூப்பிட்டார். இந்த சத்தம் எமலோக பெண்களுடன் கிலுகிலுப்பில் இருந்த நாகர்ஜுனாவுக்கு கேட்கவில்லை. ஆனால், எமதர்மனுக்கு கேட்டது. இதை வைத்து இவரை எப்படியாவது எமலோகத்தில் இருந்து விரட்டி விட்டால் போதும் என்று இருந்த எமனுக்கு உன் மனைவி உன்னை கூப்பிடுகிறாள் என்று கூறினார்.
 
அதைக் கேட்ட நாகர்ஜுனா பதறிப்போய், “அய்யா, நான் போகமாட்டேன். போனால் அவள் என்னை அடித்து, துவைத்து, பிழிந்து விடுவாள்’ என்று அடம்பிடித்தார். எமராஜனுக்கு இது பெரிய தொல்லையாகிவிட்டது. குழப்பத்தில் குழம்பி தவிக்க தொடங்கினார் எமன். இப்படி ஒரு காட்சி தேவி பரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸின் ‘சோக்காலி மைனர்’ படத்தில் இடம்பெற்றுள்ளது.
 
இந்த படத்தில் நாகர்ஜுனா இரு வேடங்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி, பிரம்மானந்தம், நாசர், ராமராஜீவ், தளபதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘சோக்காலி மைனர்’ என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வந்த மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படத்தை கல்யாண கிருஷ்ண குரசாலா இயக்கியுள்ளார்.
 
கௌபாய் எம்.நிரஞ்சன் குமார் யாதவ் தயாரித்துள்ளார். சுகுமார் கணேஷின் பாடலுக்கு அனுப்ரூபன்சும், ஜான் பீட்டரும் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பி.எஸ்.வினோத்தும், ஆர்.சித்தார்த்தும் அமைத்துள்ளனர். மைக்கேல் யாகப்பன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. 
 

மூலக்கதை